தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் கைது: சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல் - சு. வெங்கடேசன் கண்டனம்

Published On 2025-08-14 15:31 IST   |   Update On 2025-08-14 15:31:00 IST
  • அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
  • போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இரவோடு இரவாக காவல்துறை நடத்திய 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல்.

அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.

அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.

உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News