தமிழ்நாடு செய்திகள்

உரிமைத்தொகையை செலவு செய்துவிட்டதால் கோபித்துச்சென்ற மனைவி- கணவர் தற்கொலை

Published On 2026-02-18 08:18 IST   |   Update On 2026-02-18 08:18:00 IST
  • பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
  • கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 32). இவருடைய மனைவி ராமு (28). இவரது வங்கிக்கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம். கோடை கால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

இந்த பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ராமு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News