தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல்

Published On 2026-02-18 07:58 IST   |   Update On 2026-02-18 07:58:00 IST
  • தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரி சட்டசபை 15-6-2026-ல் முடிவடைகிறது. இதுபோல மேற்கு வங்காள சட்டசபை 7-5-2026-லும், அசாம் சட்டசபை 20-5-2026-லும், கேரள சட்டசபை 23-5-2026-லும் நிறைவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்தல்களுக்கான அட்டவணை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலை முன்னிட்டு. தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். தேர்தல் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக தேர்தல் அதிகாரிகள் அசாமில் முகாமிட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில்தான் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளி இறுதித் தேர்வுகளை கருத்தில்கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தேர்தலைப் பொறுத்தவரை கடந்த முறை மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News