தமிழ்நாடு செய்திகள்

பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! - காங்கிரஸ் தலைமைக்கு மாணிக்கம் தாகூர் சவால்?

Published On 2026-02-18 07:47 IST   |   Update On 2026-02-18 08:51:00 IST
  • கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது.
  • மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டம் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. கூட்டணி குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்து இருந்தார்.

மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

காலை வணக்கம்.

தேடிச்சோறு நிதம் தின்று பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பம் மிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப்போல நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News