தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை

Published On 2025-07-17 13:06 IST   |   Update On 2025-07-17 14:03:00 IST
  • கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
  • அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

* தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும்.

* கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.

* அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்.

* அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.

* அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் எனது பங்கு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

Similar News