தமிழ்நாடு செய்திகள்
வேலு நாச்சியார் நினைவு தினம் - த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
- சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.