தமிழ்நாடு செய்திகள்

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது- அமைச்சர் மூர்த்தி

Published On 2025-09-14 17:52 IST   |   Update On 2025-09-14 17:52:00 IST
  • விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில்.
  • 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது.

திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர்," சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது என்றார்.

இதுகுறித்து மேலும் கூறிய அமைச்சர் மூர்த்தி,"கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது" என்றார்.

Tags:    

Similar News