ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.
சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்?
கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
கேள்வி எழுப்பிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.