தமிழ்நாடு

கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி- உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-03-15 12:48 GMT   |   Update On 2024-03-15 12:51 GMT
  • பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.
  • கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

இதையடுத்து, அனுமதி மறுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மாலை தீர்ப்பளித்தார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News