கிரிக்கெட் (Cricket)

WTC இறுதிப்போட்டியை இங்கு நடத்தினால் நன்றாக இருக்கும் - கம்மின்ஸ் யோசனை

Published On 2025-06-10 08:50 IST   |   Update On 2025-06-10 08:50:00 IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது.
  • நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இறுதிப்போட்டி நடத்தும் இடம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை ஒரே இடத்தில் நடத்துவதும் நல்லதுதான். அதே சமயம் கோப்பையை வெல்லும் அணியின் சொந்த நாட்டில், அடுத்த தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது சிறப்பான சாதனை தான் என்றாலும் 2023 இல் ஒருநாள் உலக கோப்பையை வென்றதை விடவும் அது கீழானது தான்" என்று கூறினார்.

Tags:    

Similar News