கிரிக்கெட் (Cricket)

தோனிக்கு நடந்தது தான் எனக்கும் நடந்தது... அது எனக்கு பிடிக்கவில்லை - விராட் கோலி ஓபன் டாக்

Published On 2026-01-12 07:25 IST   |   Update On 2026-01-12 07:25:00 IST
  • சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
  • நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News