கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

Published On 2026-02-26 06:51 IST   |   Update On 2026-02-26 06:56:00 IST
  • தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
  • இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

அகமதாபாத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

எந்த அணி 2-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும். இதனால் அந்த அணி வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 1 புள்ளிகளுடன் இருந்தன.

இலங்கை ஒரு தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறவில்லை. இந்தநிலையில், நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இலங்கை அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

டி௨௦ உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News