கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக்கோப்பை 2026: இலங்கை அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2026-02-25 20:58 IST   |   Update On 2026-02-25 21:00:00 IST
  • இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் க்ரூப் 2-இல் இடம்பெற்றுள்ளன.
  • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவுபெற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் க்ரூப் 2-இல் இடம்பெற்றுள்ளன. இதுவரை இவ்விறு அணிகளும் ஒரு போட்டியில் விளையாட இருந்தன. எனினும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விளையாடிய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் தோல்வியை தழுவியது. நெட் ரன் ரேட் முறையில் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் நோக்கில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால், முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

இதில், அதிகபட்சமாக மிச்சல் சான்ட்னர் 47 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ரச்சின் ரவீந்திரா 32, கோல் மெக்கான்ச்சி 31, ஃபின் ஆலன் 23 என்களும் எடுத்தனர். இந்நிலையில், 169 என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News