கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் விலகினால் நாங்க வரோம் - ஐஸ்லாந்து கிண்டல் பதிவு

Published On 2026-01-28 15:21 IST   |   Update On 2026-01-28 15:21:00 IST
  • வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
  • வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது

இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோஹ்சின் நக்வி, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து வாரியம் இறுதி முடிவை எடுக்கும் என்று மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை பாகிஸ்தான் அணி விலகினால் ஐஸ்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இதனை கிண்டல் செய்யும் விதமாக ஐஸ்லாந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளது.

அந்த பதிவில், "டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் விரைவில் முடிவெடுக்க வேண்டியது எங்களுக்கு மிகவும் அவசியம். பிப்ரவரி 2ஆம் தேதி அவர்கள் விலகிக்கொண்டால், நாங்கள் உடனடியாகப் புறப்படத் தயாராக இருக்கிறோம். ஆனால், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் கொழும்புக்கு சரியான நேரத்தில் செல்வதற்கு விமான அட்டவணையைத் திட்டமிடுவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. எங்கள் தொடக்க பேட்டருக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது" என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News