கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை 2026: சேப்பாக்கத்தில் 4 பயிற்சி போட்டி
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்ட விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
- இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற 4-ந்தேதி மோதுகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்ட விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற 4-ந்தேதி மோதுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.படேல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி இதே தேதியில் அயர்லாந்தை கொழும்பில் சந்திக்கிறது. ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்துடனும், நியூசிலாந்து அணி அமெரிக்காவுடனும் (5-ந்தேதி) மோதுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் 4 பயிற்சி ஆட்டம் நடக்கிறது. பிப்ரவரி 2-ந் தேதி கனடா-இத்தாலி அணிகளும் (இரவு 7 மணி), 3-ந் தேதி நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (மாலை 5 மணி), 5-ந்தேதி கனடா-நேபாளம் (பிற்பகல் 3 மணி) 6-ந்தேதி இத்தாலி-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பிற்பகல் 3 மணி) அணிகளும் மோதுகின்றன.