கிரிக்கெட் (Cricket)
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
- முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது.
- தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பார்ல்:
தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது. ஹெட்மயர் அதிகபட்சமாக 32 பந்தில் 48 ரன் ( 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ், கார்பின் போச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மர்க்ராம் 47 பந்தில் 86 ரன் ( 9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.