கிரிக்கெட் (Cricket)

அடுத்த விராட் கோலி இவர்தான் - முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர்

Published On 2025-06-10 16:32 IST   |   Update On 2025-06-10 16:32:00 IST
  • இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
  • சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவம் உள்ள வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இளம் வீரர்கள் கொண்ட இந்த அணியில் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட்டில் அறிமுகமாகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலியாக சாய் சுதர்ஷன் இருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தற்போது இந்திய அணியில் சில நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும் பயமற்றவராகவும் தெரிகிறார். இங்கிலாந்து சூழ்நிலைகளிலும் சர்ரே அணிக்காகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

இதனால் நான்காம் இடத்தில் விராட் கோலியின் ரோலை ஏற்று இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர் வருவார் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் ஒரு வீரரை நான் காண விரும்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம், இளம் இந்திய டெஸ்ட் வீரர்களும் அதே வழியில் விளையாடுவதை நான் காண விரும்புகிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News