ஐ.பி.எல்.(IPL)

ஆரஞ்ச் கேப் உட்பட 4 முக்கிய விருதுகளை தட்டி தூக்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன்

Published On 2025-06-04 06:53 IST   |   Update On 2025-06-04 06:53:00 IST
  • நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை சாய் சுதர்சன் கைப்பற்றினார்.
  • வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை சாய் சுதர்சன் வென்றார்.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் 4 விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை கைப்பற்றிய சாய் சுதர்சன், 88 பவுண்டரிகள் அடித்து அதிக போர் அடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ரூபே ஆன் தி போர்ஸ் ஆப் தி சீசன் விருதையும் வென்றார்.

மேலும், வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை வென்ற அவர், 1495 பேண்டசி புள்ளிகள் பெற்று பேண்டசி கிங் விருதையும் வென்றார்.

Tags:    

Similar News