ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: மும்பை அணிக்காக 6000 ரன்கள் குவித்து ரோகித் சாதனை

Published On 2025-05-01 20:38 IST   |   Update On 2025-05-01 20:38:00 IST
  • ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 11.1 ஓவர் முடிவில் 112 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
  • ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில ரோகித் உள்ளார்.

18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.

நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் மும்பை அணிக்காக 6000 ரன்களை கடந்து ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில ரோகித் உள்ளார். ஆர்,சி.பி. அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரை 8447 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News