ஐ.பி.எல்.(IPL)

வேறு என்ன செய்ய முடியும்?... KKR அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முஸ்தபிசுர் ரகுமான் வேதனை

Published On 2026-01-04 11:19 IST   |   Update On 2026-01-04 11:19:00 IST
  • முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  • முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தனியார் ஊடகத்தில் பேசிய முஸ்தபிசுர் ரகுமான், "என்னை அணியில் இருந்து விடுவித்துவிட்டால், என்னால் வேறு என்ன செய்ய முடியும்?" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

Tags:    

Similar News