ஐ.பி.எல்.(IPL)
ஐபிஎல் மினி ஏலம்: ஜாக்பாட் அடித்த அன்கேப்ட் பிளேயர் -ஆகிப் நபி தர் 8.40 கோடி
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- பதிரனாவை 18 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ஆகிப் நபி தர்ரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.