கிரிக்கெட் (Cricket)

முதல் ஒருநாள் போட்டி - பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

Published On 2024-11-04 16:05 IST   |   Update On 2024-11-04 16:05:00 IST
  • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.

அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில் களத்திற்குள் வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி 32 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News