கிரிக்கெட் (Cricket)
ஐதராபாத் அணி கேப்டனாக முகமது சிராஜ் நியமனம்
- திலக் வர்மா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
- முகமது சிராஜ் லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ரஞ்சி டிராபி தொடரில் ஐதாராபாத் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் கடைசி இரண்டு போட்டியில் வருகிற 22-ந்தேதி மும்பையையும், ஜனவரி 29-ந்தேதி சத்தீஸ்கர் அணியையும் ஐதராபாத் எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்பட்டு வந்தார். அவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் திலக் வர்மா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
முகமது சிராஜ் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.