கணவருக்கு ஆண்மை குறைவு... கர்ப்பம் தரிக்க மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்
- வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.
- செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மாமனாரே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. அப்பெண்ணுக்கு 40 வயது ஆகியுள்ளதால் கருவுறுதல் பிரச்சனை இருக்கலாம் என்பதற்காக அந்த தம்பதி மருத்துவரை அணுகியுள்ளனர்.
அப்போது மருத்துவர்கள் அவரது கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
அப்பெண்ணுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க விருப்பம் இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் குடும்பம் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் 2024 ஜூலை மாதம் அப்பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அவரது கணவரிடம் கூற, அவரோ எனக்கு குழந்தை வேண்டும், ஆதலால் இதை பற்றி நீ வெளியில் சொல்ல கூடாது. இதனை மீறினால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மருமகளை பலமுறை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனாலும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை.
இதனால் 2024 டிசம்பர் மாதம் கணவரின் தங்கையினுடைய கணவர் குழந்தைக்காக அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பல மாதங்கள் தொடர்ந்து அவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் விளைவான இந்தாண்டு ஜுன் மாதம் அப்பெண் கருத்தரித்தார். ஆனால் சில வாரங்களில் அப்பெண்ணின் கரு கலைந்தது.
இதனையடுத்து அப்பெண் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.