குஜராத்தில் "திரங்கா யாத்திரை"- மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
- சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
- பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாஜகவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் தலைவர் ஜே.பி. நட்டா பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.
அதாவது, பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 13 முதல் மே 23 வரை 10 நாள் திரங்கா யாத்திரை திட்டமிடப்பட்டது.
இந்த யாத்திரையில் மக்களிடம் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகளைப் பற்றி எடுத்துக்கூற பாஜக விழைகிறது. சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்தி வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை யாத்திரையில் முன்னிலைப் படுத்த பாஜக திட்டமிட்டது.
இந்நிலையில், குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் "திரங்கா யாத்திரை" நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து முப்படைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அகமதாபாத்தில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி அமித் ஷா பேரணியில் பங்கேற்றார்.