இந்தியா

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனவரி 22-ல் உ.பி.யில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Published On 2024-01-09 14:47 GMT   |   Update On 2024-01-09 14:48 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
  • அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.

ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ம் தேதி அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். 22-ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News