இந்தியா

ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் ராகுல் காந்தி எங்கே இருப்பார்?... காங்கிரஸ் பதில்

Published On 2024-01-20 09:54 GMT   |   Update On 2024-01-20 09:54 GMT
  • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
  • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாளைமறுதினம் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் திட்டமாக இதை பா.ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக தினமான 22-ந்தேதி ராகுல் காந்தி எங்கே இருப்பார். அவரது நடைபயணம் எங்கே என்று கேள்வி எழுகிறது. அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்து கூறியதாவது:-

ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறும் 22-ந்தேதி ராகுல் காந்தி மற்றும் அவரது நடைபயணம் எங்கே? என ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 22-ந்தேதி காலை ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா பிறந்த இடமான அசாம் மாநிலம் படாத்ராவா தன் என்ற இடத்தில் இருப்பார் என்பதை சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இருந்தபோதிலும் இன்றும் பொருந்தக்கூடிய அவருடைய சித்தாந்தங்கள் கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

15-ம் மற்றும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி, அறிஞர் உள்ளிட்ட பன்முக தன்மை கொண்டவரும், அசாம் காலாசாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவருமாக கருதப்பட்டவர் ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா. அவர் பிறந்த இடத்தில் ராகுல் காந்தி வழிபாடு செய்கிறார்.

ராகுல் காந்தியின் 3-வது நாளான நடைபயணம் இன்று அசாமில் தொடங்கியது. ராகுல் காந்தியுடன் ஜெய்ராம் ரமேஷும் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News