இந்தியா

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2025-04-22 18:35 IST   |   Update On 2025-04-22 21:48:00 IST
  • பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
  • இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி உள்துறை மந்திரி அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். காஷ்மீர் நிலைமையை கண்காணிக்கும் படி உத்தரவிட்ட பிரதமர் மோடி, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News