இந்தியா
தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை- கேரள முதல்வர் எச்சரிக்கை
- பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
- பள்ளிகளில் பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது.
கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதி, மதம் கடந்து கல்வி கற்கும் இடம் பள்ளி, அங்கு பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக உணர்வு மிக்க கேரளாவில் பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.