இந்தியா

அரசு மருத்துவமனைக்கு தந்தையை தோளில் சுமந்து சென்ற வாலிபர்- உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த ஊழியர்கள்

Published On 2026-02-05 15:12 IST   |   Update On 2026-02-05 15:12:00 IST
  • முதுமை காரணமாக இம்ரத்தால் நடக்க முடியவில்லை.
  • மருத்துவமனை வளாகத்தில் தனது தந்தையை சுமந்தபடி சில நிமிடங்கள் சுற்றித் திரிந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த முனேஷ் ரகுவன்ஷி என்ற நபர் தனது தந்தை இம்ரத் சிங்கை குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

வாகனம் அவர்களை மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றது. முதுமை காரணமாக இம்ரத்தால் நடக்க முடியவில்லை. முனேஷ் ஸ்ட்ரெச்சரைத் தேடினார். மருத்துவமனை ஊழியர்கள் கூட அவருக்கு உதவ வரவில்லை. இதனால், அவர் தனது தந்தையை தோளில் சுமந்து மருத்துவமனைக்குள் சென்றார்.

அவர் மருத்துவமனை வளாகத்தில் தனது தந்தையை சுமந்தபடி சில நிமிடங்கள் சுற்றித் திரிந்தார். இதனை வேடிக்கை பார்த்த ஊழியர்கள் உதவ முன்வரவில்லை. முனேஷ் தனது தந்தையை 2-வது மாடிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. லிப்ட் பழுதடைந்தது முனேஷ் மட்டும் ஸ்ட்ரெச்சரில் தனது தந்தையை வைத்து 2-வது மாடிக்கு இழுத்துச் சென்றார். இது அரசு மருத்துவமனையில் அவலம் நடந்ததாக பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முனேஷ் கூறுகையில், என் அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. சரியான நேரத்தில் நான் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. நான் நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன் என்றார்.

Tags:    

Similar News