இந்தியா

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க அமோக வெற்றி- 98 நகராட்சிகளில் முன்னிலை

Published On 2025-12-21 15:04 IST   |   Update On 2025-12-21 15:04:00 IST
  • மொத்தம் உள்ள 246 நகராட்சியில் பா.ஜனதா 98 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
  • உத்தவ் தாக்கரே சிவசேனா-7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது.

இதில் பல இடங்களில் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. சில இடங்களில் பா.ஜ.க.-சிவசேனா, காங்கிரஸ்- சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு இடையே மராட்டிய உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னணி வகித்தன.

பா.ஜ.க கூட்டணி 192 இடங்களில் முன்னணியில் உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலை யில் உள்ளன.

மொத்தம் உள்ள 246 நகராட்சியில் பா.ஜனதா 98 இடங்களில் முன்னிலையில் உள்ளன. சிவசேனா 44 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் 28 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா-7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சைகள் 29-ல் முன்னிலையில் உள்ளன.

மொத்தம் உள்ள 42 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜனதா 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனா-8, காங்கிரஸ்-4, உத்தவ்தாக்கரே சிவசேனா-3, தேசியவாத காங்கிரஸ்-3, மற்றவை-2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

Tags:    

Similar News