இந்தியா

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை

Published On 2026-02-06 11:58 IST   |   Update On 2026-02-06 11:58:00 IST
  • ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய் ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார்.
  • லக்கி ஓபராயின் மனைவி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.

சண்டிகர்:

பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய். இவர் இன்று காலை ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார். அவர் ஜீப்பை குருத்வாராவுக்கு முன்பு நிறுத்தி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஜீப்புக்குள் இருந்த லக்கி ஓபராயை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் கண்ணாடி உடைந்து லக்கி ஓபராய் மீது 5 குண்டுகள் பாய்ந்தன. உடனே தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த லக்கி ஓபராயை பொதுமக்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பஞ்சாப்பில் பட்டப்பகலில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்கி ஓபராயின் மனைவி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துக்கு பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும்போது, முதல்-மந்திரி பகவந்த் மான் நிர்வாகத்தின் கீழ் பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஆளும் கட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? என்றார்.

Tags:    

Similar News