இந்தியா
சிக்கிமில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
- சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அதிகாலை சுமார் 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
கேங்டாக்:
சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் (Gyalshing) பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை சுமார் 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
மக்கள் உறக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த சில நாளாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.