இந்தியா

RAC பயணிகளுக்கு இனி பாதி கட்டணம் தான்?.. ரெயில்வேக்கு பாராளுமன்ற குழு பரிந்துரை

Published On 2026-02-06 15:27 IST   |   Update On 2026-02-06 15:27:00 IST
  • தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி.
  • ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது

ரெயில்களில் RAC முறையில் பயணிக்கும் பயணிகளிடம் முழு பயணக் கட்டணத்தையும் வசூலிக்கும் இந்திய ரெயில்வேயின் நடைமுறைக்கு பாராளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முழு கட்டணத்தைச் செலுத்தியும், தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது, ஆனால் பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே RAC பயணிகளிடம், முழு கட்டணத்தில் பாதியை திரும்ப வழங்க (Refund) வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் RAC பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்குக் கட்டண ரீதியாக ஏதேனும் ஒரு பலன் கிடைக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

RAC நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

ரெயில்வே அமைச்சகம் இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற நிலைக்குழு என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிலரை உள்ளடக்கிய குழுவாகும். இது அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, தொடர்ந்து கண்காணிக்கும் பணியை செய்கிறது.   

Tags:    

Similar News