null
ஆபரேஷன் சிந்தூர்: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், போர் பதற்றம் காரணமாக காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச்சில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இன்று மூட உத்தரவிடபட்டுள்ளது. அதன்படி இந்த 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.