இந்தியா

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

Published On 2025-07-01 09:51 IST   |   Update On 2025-07-01 09:51:00 IST
  • டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
  • பழைய வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி இயக்கப்படும் 2 சக்கர வாகங்களுக்கு 5000 ரூபாயும் 4 சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News