இந்தியா
பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை முறியடித்த இந்தியப் படைகள்- வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்
- வடக்கு நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்திய ராணுவம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில்,
வடக்கு நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டது.
இந்திய ராணுவம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் பலத்தால் பதிலளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.