இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது எப்படி?- வீடியோ வெளியிட்டு விளக்கிய விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி

Published On 2025-05-11 19:48 IST   |   Update On 2025-05-11 19:50:00 IST
  • பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
  • எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கப்படுவதற்கு முன்பு, பின்பு வீடியோ, படங்களை வெளியிட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி விளக்கினார்.

இந்திய ராணுவத்தின் திட்டமிட்ட துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறியதாவது:-

பாகிஸ்தானில் ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இருந்தன. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து முன்கூட்டியே சில முகாம்கள் காலி செய்யப்பட்டன.

இந்தியா பதில் தாக்குதல் நடத்தியபோது பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியது.

மே 10ம் தேதி பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம்.

பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள பஸ்ரூர் வான் பாதுகாப்பு ரேடார் இந்தியாவால் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளமான ரஹீம் யார் கான் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News