இந்தியா

H-1B விசா விவகாரம்: இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக உள்ளார் - பழைய பதிவை பகிர்ந்த ராகுல்

Published On 2025-09-20 15:18 IST   |   Update On 2025-09-20 15:18:00 IST
  • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
  • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி 2017 இல் பதிவிட்ட டுவீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார். இப்பதிவில், "மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக உள்ளார்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News