இந்தியா

ராணா நாடு கடத்தப்பட்டது வெற்றி அல்ல: மக்களை திசை திருப்புவதற்கான சூழ்ச்சி- கண்ணையா குமார்

Published On 2025-04-10 20:18 IST   |   Update On 2025-04-10 20:18:00 IST
  • ராணா நடு கடுத்தப்பட்ட மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ராஜாங்க ரீதியிலான வெற்றி- அமித் ஷா.
  • இது வெற்றி அல்ல, மக்களை திசை திருப்புவதற்கான சூழ்ச்சி- கண்ணையா குமார்.

மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ராணா இந்தியா கொண்டு வரப்பட்டது, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ராஜாங்க ரீதியிலான வெற்றி (diplomatic success) என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் கண்ணையா பதில் அளிக்கையில் "ராணா நாடு கடுத்தப்பட்டது ராஜாங்க ரீதியிலான (diplomatic success) வெற்றி அல்ல. மத்திய அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைவதில் இருந்து பொது மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்கான சூழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக பெயருக்கு ஏற்ற சாதனை எதையும் செய்யவில்லை என்பதால், ஏதாவது ஒரு சாக்குப்போக்கின் கீழ் பொதுப் பிரச்சினைகளைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. வக்ஃப் மசோதாவும் அதற்கு மற்றொரு உதாரணம்தான்.

ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாக அரசாங்கம் கூறியது. முஸ்லிம் சமுதாயத்தினர் தங்களுக்கு சொந்தமான இடங்களின் மொட்டை மாடிகளில் 'நமாஸ்' செய்ய அனுமதிக்காத ஒரு ஆட்சியில் இருந்து இப்படி கூறுவதை, யார் நம்புவார்கள்?

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அவர்களின் சொல்லாட்சியை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். இப்போது பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்று ஒவ்வொரு பாஜக தலைவரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போதிருந்து அங்கு சொத்து வாங்க முடிந்த ஒருவரை எனக்குக் காட்டுங்கள்" என்றார்.

Tags:    

Similar News