இந்தியா

கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு டெல்லி கோர்ட்டில் 7-ந் தேதி விசாரணை

Published On 2024-02-04 05:19 GMT   |   Update On 2024-02-04 05:19 GMT
  • 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.
  • அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோர் கைதாகி ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன் அனுப்பப்பட்டது.

நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3, 19, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. பண மோசடி தொடர்பான விசாரணைக்காக இந்த சம்மனை அனுப்பி இருந்தது. ஆனால் 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.

இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

Tags:    

Similar News