இந்தியா

முர்ஷிதாபாத் கலவரம்: அனைத்து கட்சியினரும் அமைதியாய் இருப்பது ஏன்?-யோகி ஆதித்யநாத்

Published On 2025-04-15 14:54 IST   |   Update On 2025-04-15 14:54:00 IST
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
  • முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.

வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?

வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News