இந்தியா

'ஆபரேஷன் சிந்தூர்' சாதனைகளை மக்களிடம் பரப்ப நாடு முழுவதும் பாஜக 10 நாள் யாத்திரை!

Published On 2025-05-12 23:43 IST   |   Update On 2025-05-12 23:44:00 IST
  • பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்துவார்கள்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா ராணுவம் தாக்கியது.

இந்த நடவடிக்கையில் சுமார் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்த கடந்த வாரம் பாகிஸ்தான் இந்திய ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது. 3 நாள் பரஸ்பர தாக்குதலுக்கு பின் கடந்த சனிக்கிழமை ஒப்பந்தம் மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று பாஜகவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் தலைவர் ஜே.பி. நட்டா பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

அதாவது, பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 13 முதல் மே 23 வரை 10 நாள் திரங்கா யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையில் மக்களிடம் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகளைப் பற்றி எடுத்துக்கூற பாஜக விழைகிறது. சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பார்கள்.

பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை யாத்திரையில் முன்னிலைப் படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News