இந்தியா

சோகத்தில் முடிந்த சுற்றுலாப் பயணம்.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்

Published On 2025-10-08 03:30 IST   |   Update On 2025-10-08 03:30:00 IST
  • 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
  • அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது

கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.

இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது. இதனால் ஏழு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நவாஸ் என்ற ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மீட்கப்பட்ட நவாஸைத் தவிர, வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று துமகூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் தெரிவித்துள்ளார்.

அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News