என் மலர்tooltip icon

    இந்தியா

    பூட்டிய வீட்டுக்குள் தலையில் குண்டு துளைத்த நிலையில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்
    X

    பூட்டிய வீட்டுக்குள் தலையில் குண்டு துளைத்த நிலையில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்

    • சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
    • ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

    சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார் காலனியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று காலை அந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நில அளவையாளராக பணியாற்றி வந்த அசோக் ரதி (40), அவரது மனைவி அஜந்தா (37), தாய் வித்யாவதி (70) மற்றும் மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) ஆகிய ஐந்து பேரும் ஒரே அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

    ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

    இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×