இந்தியா

தெருநாய் விவகாரம்: Body Language-ஐ சுட்டிக்காட்டு மேனாகா காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

Published On 2026-01-20 18:41 IST   |   Update On 2026-01-20 18:41:00 IST
  • அவருடைய போட்காஸ்ட்-ஐ கேட்டீர்களா?. அவரோட பாடி லாங்குவேஜ் என்ன?
  • அவர் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்?

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு முன் என்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் விலங்குகள் ஆர்வலர் மட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் காந்தியை கடுமையாக கண்டித்தது.

மேனாகா காந்தி கருத்து குறித்து நீதிபதிகள் கூறுகையில் "நீங்கள் (மேனகா காந்திக்காக வாதாடிய வழக்கறிஞர்) நீதிமன்றத்தில், நாங்கள் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களுடைய கட்சிக்காரர் எந்த மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார் என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா?. ஆனால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் பெருந்தன்மையுடன் உள்ளோம்.

அவருடைய போட்காஸ்ட்-ஐ கேட்டீர்களா?. அவரோட பாடி லாங்குவேஜ் என்ன? அவர் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? எச்சரிக்கையுடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, உங்கள் கட்சிக்காரர் யார் மீதும், எதன் மீதும் தனக்குப் பிடித்தமான எல்லாவிதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்" என்றனர்.

Tags:    

Similar News