இந்தியா

இந்தியாவின் பாஸ்மதி அரிசி வர்த்தகத்தை பாதித்த ஈரான் போர்: 4 லட்சம் டன் தேக்கம்..!

Published On 2026-03-06 19:29 IST   |   Update On 2026-03-06 19:29:00 IST
  • கப்பல் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிப்பு.
  • உள்ளூர் மார்க்கெட்டிலும் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் சிரமம்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போரால் இந்தியாவின் அரசி ஏற்றுமதி வர்த்தகம் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நாடுகளின் பாஸ்மதி அரசி தேவையை இந்தியாதான் 50 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. தற்போது போர் நடைபெற்று வருவதால் பாஸ்மதி அரசியை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 லட்சம் டன் அரிசி இந்தியாவில் தேங்கியுள்ளது.

உள்ளூர் மார்க்கெட்டில் ஏற்கனவே பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், திடீரென வெளிநாடுகளின் ஏற்றுமதி நிறுத்தம் காரணமாக அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாக அரசி மண்டி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குவிண்டாலுக்கு 1000 ரூபாய் வரை விலை குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கப்பல் செல்வதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அதன் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தியுள்ளனர். இதுவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News