இந்தியா

டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க தூதர் - யார் இந்த தரஞ்சித் சிங் சந்து?

Published On 2026-03-06 11:34 IST   |   Update On 2026-03-06 11:34:00 IST
  • ஐநா சபை மற்றும் வாஷிங்டனில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
  • 2024 மக்களவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

வி.கே. சக்சேனாவிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள தரஞ்சித் சிங் சந்துவின் பின்னணி கவனம் பெற்று வருகிறது.

பஞ்சாபை சேர்ந்த இவர், 1988- பேட்ச் இந்திய வெளியுறவு பணி (IFS) அதிகாரி ஆவார்.

தரஞ்சித் சிங் சந்து, 2020 முதல் 2024 வரை அமெரிக்காவிற்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.

அதற்கு முன் ஐநா சபை மற்றும் வாஷிங்டனில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார்.

வெளியுறவுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவரை டெல்லியின் துணை நிலை ஆளுநராக நியமித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லி துணை நிலை ஆளுநரின் கீழ் தான் டெல்லி காவல்துறை மற்றும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் உள்ளன. 

இதற்கிடையே சுமார் நான்கு ஆண்டுகள் டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்த வி.கே. சக்சேனா, தற்போது லடாக்கின் புதிய துணைநிலை ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

இவரது பதவிக்காலத்தில் டெல்லி ஆம் ஆத்மிஅரசுடன் நிர்வாக ரீதியாகப் பல கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. 

இதற்கிடையே மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில் அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் கூடுதல் பொறுப்பு கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News