இந்தியா
மாயமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானப்படை அறிவிப்பு
- அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் புறப்பட்டது.
- கர்பி அங்லாங் பகுதியில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து நேற்று மாலை சுகோய்-30 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
திடீரென அந்தப் போர் விமானம் இரவு 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது. விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் அசாமின் கர்பி ஆங்லாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது என்றும், தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என பாதுகாப்புத்துறை தெரிவித்தது.