#NitishKumar மக்கள் தீர்ப்புக்கு மாபெரும் துரோகம்- நிதிஷ்குமார் முடிவு பற்றி காங்கிரஸ் கருத்து
- பீகார் சட்டசபை தேர்தலின்போது இந்திய தேசிய காங்கிரஸ் அடிக்கடி சொன்னது தற்போது நடக்கப் போகிறது.
- தலைமைத்துவ புரட்சியும், ஆட்சி மாற்றமும் நடக்கப் போகிறது.
புதுடெல்லி:
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு போட்டியிடுவது பற்றி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பீகார் சட்டசபை தேர்தலின்போது இந்திய தேசிய காங்கிரஸ் அடிக்கடி சொன்னது தற்போது நடக்கப் போகிறது.
தலைமைத்துவ புரட்சியும், ஆட்சி மாற்றமும் நடக்கப் போகிறது. எப்படி பார்த்தாலும், இது மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) கட்சி பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி என்ன திட்டம் வகுத்துள்ளது என்பதோ. பா.ஜனதா என்ன மாற்றத்தை விரும்புகிறது என்பதோ பிரச்சினை அல்ல.
ஆனால், நிதிஷ்குமார் பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி கேட்டுப்பெற்ற மக்கள் தீர்ப்புக்கு இது துரோகம் செய்யும் செயல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.